உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடி ராமர் கோயிலில் முள்மரங்கள்

தனுஷ்கோடி ராமர் கோயிலில் முள்மரங்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலை சுற்றி வளர்ந்துள்ள முள் மரங்களால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கோதண்டராமர் கோயில், ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில், தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. ராமேஸ்வரம் திருக்கோயிலின் உபகோயிலான இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசித்து வருகின்றனர். ஆனால் இக்கோயில் பராமரிப்பில் இந்து அறநிலைத்துறை அலட்சியமாக உள்ளதால், தற்போது கோயிலை சுற்றி காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கோயில் வெளியில் தெரியாதபடி மூடி உள்ளது. இதனை அகற்றிட கோரிக்கை விடுத்தும் இந்து அறநிலைத்துறை பாராமுகமாக உள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !