உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் கோடை உற்சவம்

சரநாராயண பெருமாள் கோவிலில் கோடை உற்சவம்

 பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று கோடை உற்சவத்தையொட்டி, உற்சவர் பெருமாள், தாயாருடன் சேர்த்தி சேவையில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று கோடை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வெட்டி வேர், சந்தன வாசனை திரவியங்களுடன் உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !