சிங்கம்புணரியில் சித்ரா பௌர்ணமி விழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி கோயில்களில் சித்ரா பெளர்ணமி விழா கொண்டாடப்பட்டது. சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு பால்குட ஊர்வலம் நடக்கவில்லை. பக்தர்கள் நேரடியாக வீடுகளிலிருந்து நேர்த்திக்கடன் பாலை கொண்டு வந்து கோயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த தொட்டியில் ஊற்றினர். மின்மோட்டார் மூலம் சந்நிதிக்கு பால் கொண்டுசெல்லப்பட்டு சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. உலகம்பட்டி ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவரான தண்டாயுதபாணிக்கும், சித்தர் சேவுகானந்தா ஞானியாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அரசு அறிவித்தபடி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் நடந்தது.