யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜை
ADDED :1990 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜை நடந்தது.சுவாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று, யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. யோக நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் பக்தர்கள் இன்றி பூஜை நடந்தது.