பெரியகுளத்தில் பச்சைப்பட்டு அலங்காரத்தில் பெருமாள்
ADDED :1736 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் வரதராஜப்பெருமாள், உற்சவர் அழகருக்கு 16 வகையான அபிேஷகம் நடந்தது. இருவருக்கும் பச்சைப்பட்டு உடுத்தி, சிவப்பு திலகமிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சி கோயில் வளாகத்திலேயே நடந்தது. கொரோனா பரவலிலிருந்து மக்களை காப்பாற்றவும், உலக நன்மை வேண்டியும் அர்ச்சகர் கண்ணன் தலைமையில் சங்கல்பம் நடந்தது.