அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்த வைகையில் குவிந்த பக்தர்கள்
ADDED :1737 days ago
மதுரை: ஆண்டுதோறும் மதுரை ஏ.வி.பாலம் அருகில் உள்ள ஆழ்வார்புரம் வைகையாற்றில், அழகர் இறங்குவார். கொரோனா காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் இந்நிகழ்ச்சி ரத்தானது. ஆனாலும் ஆழ்வார்புரம் வைகையாற்றில் ஏராமான பக்தர்கள் அழகர் கோயில் இருக்கும் திசையை நோக்கி, முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று காலை 10:30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, ஏப்.,29 காலை 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், ஏப்.,30 இரவு பூப்பல்லாக்கு நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்கான வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகர் அருள்பாலிப்பர். பூஜை நேரம், வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.