உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு தடை

திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு தடை

 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஏப்.30 வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதியில்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

கொரோனா பரவலை தடுக்க, ஏப்.26 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஏப்.30 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், மலையடிவார சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் மற்றும் பழநி முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் திருமணத்திற்கு முன்பதிவு செய்தவர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் கோயில் அலுவலர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். அரசு உத்தரவுகளை பக்தர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மறு உத்தரவு வரும் வரை பக்தர்களுக்கு மட்டும் அனுமதியில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !