ஆனத்துார் துர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி விழா
ADDED :1624 days ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேண்டுதல் கொண்ட பக்தர்கள் பொங்கல் வைத்தும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.