உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய சிவன் கோவிலில் மோட்ச தீபம்

கொரோனாவால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய சிவன் கோவிலில் மோட்ச தீபம்

கள்ளக்குறிச்சி : கொரோனா தொற்றால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, நீலமங்கலம் சிவன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். தற்போதும் அதன் தாக்கம் குறையாமல் உள்ளது. தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மோட்சதீபம் நேற்று ஏற்றப்பட்டது.சிவபக்தர்கள் பன்னிரு திருமுறைகள், சிவபுராணம் வாசித்தனர். ராம பக்தர்கள் ராம கீர்த்தனைகளை படித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நீலமங்களம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !