சித்ரா பவுர்ணமியையொட்டி கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1624 days ago
கிருஷ்ணகிரி: சித்ரா பவுர்ணமியொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 1,008 அம்மன் திருநாமத்தை சொல்லி பெண்கள் திருவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து தீபாராதனை செய்தனர். இதில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று விரைவில் நீங்கி, மக்கள் சுபிட்சமாக வாழவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து, மீண்டு வரவும் வழிபாடு நடத்தப்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி, அனைவருக்கும் எழுத்தறிவை கற்பிக்கும் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தார். பூஜையில், ஏராளமான பெண்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.