சின்னாளபட்டி சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள்
ADDED :1989 days ago
சின்னாளபட்டி : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விசேஷ பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி கருமாரியம்மன், கன்னிவாடி சோமலிங்கசுவாமி, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன், கசவனம்பட்டி மவுனகுருசுவாமி, காரமடை ராமலிங்கசுவாமி உட்பட பல்வேறு கோயில்களில் பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.