உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மலை கோவிலில் பாரம்பரிய நிகழ்வுக்கு தடை

சென்னிமலை மலை கோவிலில் பாரம்பரிய நிகழ்வுக்கு தடை

சென்னிமலை: புது கட்டுப்பாட்டால், சென்னிமலை முருகன் கோவில் நடை, நேற்று சாத்தப்பட்டது. பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, படி மற்றும் மலை கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை வழி அடைக்கப்பட்டது. நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால், வெளியூர் பக்தர்கள் அதிகம் வந்தனர். கோவில் மூடப்பட்டதால், மலை அடிவாரத்தில் சூடம் ஏற்றி வணங்கி சென்றனர். அதேசமயம் நேற்று கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி நாள் இரவில், உள்ளூர் மக்கள் உணவு பொருட்களுடன் சென்று, கோவிலில் தரிசனம் செய்வர். மலை கோவில் வளாகத்தில் குடும்பத்துடன் சாப்பிடும் நிகழ்வு, தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. நேற்று இதற்கும் தடை விதிக்கப்பட்டதால், உள்ளூர்வாசிகள் வேதனை அடைந்தனர்.

வாசலில் வழிபட்ட பக்தர்கள்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலின், முகப்பு நுழைவுவாயில் நேற்று மூடப்பட்டது. அதேசமயம் ஆகம விதிகளின்படி அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் நடக்கும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் மூடப்பட்டாலும், நேற்று வந்த பக்தர்கள், தெற்குப்புற நுழைவுவாயில் முன் தேங்காய் உடைத்து பழம், வெற்றிலை பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி, கும்பிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !