ருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 38 லட்சத்து, 28 ஆயிரத்து, 292 ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள உண்டியல், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி முடிந்து, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், 38 லட்சத்து, 28 லட்சத்து, 291 ரூபாய், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி முடிந்து, உண்டியல் காணிக்கை எண்ணப்படும்போது, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்பர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளதால், உண்டியல் காணிக்கை குறைவாக இருந்தது.