கண்ணமங்கலம் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4869 days ago
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் மாயாண்டி சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு 8 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. ஜூன் 10 காலை 7.30 மணிக்கு 2 ம் கால யாகசாலை பூஜையும் , 8.30 மணிக்கு கன்னிகா பூஜையும் , 10.30 மணிக்கு கடம் புறப்பாடும் , 11 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. கண்ணமங்கலம் திருவேங்கடம் பட்டர் கும்பாபிஷேக பூஜைகளை செய்தார். ஊராட்சி தலைவர் பாலு , துணை தலைவர் கிருஷ்ணன் , முன்னாள் தலைவர் சிவசாமி , தாயமங்கலம் ஊராட்சி தலைவர் வசந்தா, கிராம மக்கள் கலந்து கொண்டனர்.