உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பெண்

ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பெண்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா, 32. இவர் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டுமென பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வேண்டியுள்ளார்.


தொடர்ந்து தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து தனது வேண்டுதலின்படி, பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் தனது நாக்கை அறுத்துக் கொண்டார். அப்போது கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் நாக்கினை உண்டியலில் செலுத்த முடியாமல் கோவில் படியில் வீசினார். இந்நிலையில் கோயில் வாயிலில் ரத்தம் கசிந்த நிலையில் மயங்கினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வனிதாவின் குடும்பத்தினர் தி.மு.க., விசுவாசிகளாக இருந்து வரும் நிலையில், இந்த வேண்டுதலை வைத்ததாகவும், தொடர்ந்து இதனை நிறைவேற்றும் விதமாக நாக்கை அறுத்துக் கொண்ட தாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !