உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி சிவன் கோயிலில் பக்தர்கள் இன்றி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதினத்திற்குப் பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு வழக்கமாக திருவிளக்கு பூஜை நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை. பவுர்ணமி சிறப்பு பூஜை மட்டும் வழக்கம் போல் பக்த ர்கள் இல்லாமல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !