உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நற்கூலி கிடைக்கும் மாதம்

நற்கூலி கிடைக்கும் மாதம்


‘ஆமீன்’ எனும் சொல்லுக்கு அப்படியே ஆகட்டும், பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளுதல் என்பது பொருள். ஒருவர் பிரார்த்திக்கும் போது ‘ஆமீன்’ என்று சொன்னால் “அவருடைய பிரார்த்தனையை நானும் வழிமொழிகிறேன். இறைவா ஏற்றுக்கொள்’’ என்பது பொருள்.
ஒருமுறை பள்ளிவாசலில் மிம்பர் (உரைமேடை) படிகளில் ஏறியபடி நாயகம்  “ஆமீன் ஆமீன் ஆமீன்” என்று கூறினார்.  அங்கிருந்தவர்கள் விளக்கம் கேட்டனர்.
‘‘வானவர் தலைவர் ஜிப்ரீல் மூன்று செய்திகளை கூறினார். நானும் மூன்று முறை நன்றி கூறினேன்.
1. யார் ரம்ஜான் மாதத்தை அடைந்தும் தங்களின் பாவங்களுக்காக மன்னிப்பை பெற வில்லையோ அவர்கள் நாசமாகட்டும்.
2. பெற்றோர் அல்லது அவர்களில் ஒருவர் உயிருடன் இருந்தால், அவர்களுக்குப் பணிவிடை செய்து யார் சொர்க்கம் பெறவில்லையோ அவர்கள் நாசமாகட்டும்.  
3. இறைத்துாதரின் பெயர் உச்சரிக்கப்படும் போது யார் வாழ்த்து சொல்லவில்லையோ அவர்கள் நாசமாகட்டும் என்றார் ஜிப்ரீல். அதற்கு  ஆமீன் கூறினேன்’’ என்றார்.
 ரம்ஜான் மாதத்தை வீணாக்குபவர்களுக்கு இதில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சுவனத்தின் எல்லாக் கதவுகளும் திறந்து விடப்படும் மாதம் இது. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம் ரம்ஜான். பசித்திருத்தல், நோன்பிருத்தல் எனும் வழிபாட்டின் மூலம் மிருக இச்சைகள் கட்டுப்படுத்தப்படும். ஆன்மிக உணர்வு மேலோங்கும். இப்போது செய்யும் சிறிய நற்செயலுக்குக் கூட பல மடங்கு நற்கூலி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !