ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து
ADDED :1661 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா ரத்து செய்யபட்டது.தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மே 16ல் நடக்க இருந்த வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம், ஒன்பதாம் நாள் தேரோட்டம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளது. தினமும் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மனுக்கு காலை, மாலை பூஜை மட்டும் தவறாமல் நடைபெறும். பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றனர்.