பூவேந்தியநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1661 days ago
கடலாடி: கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.மூலவர் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.