சமூகப்பணியில் கோயில்கள்
ADDED :1619 days ago
ஆன்மிகத்துடன் சமுதாயத்தை இணைக்கும் மையங்களாக கோயில்கள் இருந்தன. கல்வெட்டுகள், செப்பேடுகள் என வரலாற்றை சொல்லும் ஆவணப்பதிவு அலுவலகமாகவும், ஏழைகளுக்கு உணவிடும் தர்மச்சாலையாகவும், வேதங்களை போதிக்கும் பாடசாலையாகவும், இசை, நடனம், கூத்து பயிலும் கலாசாலையாகவும், தல விருட்சம் உள்ளிட்ட மரங்களை காக்கும் நந்தவனமாகவும், நோய் தீர்க்கும் வைத்தியசாலையாகவும், சிற்பங்களைப் பேணும் கலைக்களஞ்சியமாகவும், இயற்கை சீற்றத்தின் போது மக்களை பாதுகாக்கும் கோட்டையாகவும் செயல்பட்டன.