எமனுக்கு கிடைத்த பதவி
ADDED :1672 days ago
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எமதர்மனின் அம்சம் கொண்ட ‘எம சண்டிகேஸ்வரர்’ இருக்கிறார். இத்தலத்தில் இறக்கும் உயிர்களை சிவன் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதால், தனக்குரிய பணிகளை செய்ய முடியாமல் தவித்தார் எமன். இந்நிலையில் ‘‘ இத்தலத்தில் என்னை தரிசிப்போருக்கு பலன் தரும் சண்டிகேஸ்வர பதவியை அடைவாயாக’’ என அருள்புரிந்தார் சிவன். இதனால் ‘எம சண்டிகேஸ்வரர்’ சன்னதி இங்குள்ளது. வழக்கமான சண்டிகேஸ்வரரும் இங்குள்ளார்.