உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழும் கலை மையத்தில் சோம்நாத் ஜோதிர்லிங்க பூஜை

வாழும் கலை மையத்தில் சோம்நாத் ஜோதிர்லிங்க பூஜை

அன்னூர்: குஜராத் மாநிலம், சௌராஷ்டிரா பகுதியில் பிரசித்தி பெற்ற சோமநாத் கோயில் உள்ளது. இது சிவனின், 12 புனித ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானதாகும்.


இங்கு வைத்து பூஜிக்கப்பட்ட ஜோதிர்லிங்கம், ராமேஸ்வரத்தில் குருஜி ரவிசங்கரால் வழிபாடு செய்யப்பட்டது. இந்த ஜோதிர் லிங்கம் வாழும் கலை அன்பர்கள் பயன் பெற முக்கிய ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று அன்னூரில் உள்ள வாழும் கலை பயிற்சி மையத்திற்கு சோம்நாத் ஜோதிர் லிங்கம் கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு சுவாமி ஸ்ரீதேஜ் வழிபாடு செய்தார். ருத்ர பூஜை நடந்தது. சோம்நாத் கோயிலின் முக்கியத்துவம் குறித்து ஸ்ரீ தேஜ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !