நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :4865 days ago
பேரம்பாக்கம்: நரசிங்கபுரம் லட் மி நரசிம்மர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் லட் மி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, உற்சவர் பெருமாள் சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் மூன்றாம் நாளான, நாளை, 15ம் தேதி காலை 6 மணிக்கு கருட சேவை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை லட் மி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.