உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பன் சுவாமிகள் குரு பூஜை

பாம்பன் சுவாமிகள் குரு பூஜை

திருவான்மியூர்: பாம்பன் சுவாமிகள் குரு பூஜை, திருவான்மியூரில் நடந்தது.
திருவான்மியூர், மயூரபுரத்தில் பாம்பன் குமரகுருநாதர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், நேற்று குரு பூஜை விழா நடந்தது. நேற்று காலை, 6.30 மணிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !