சிருங்கேரி சங்கராச்சாரியார் சென்னை நகருக்கு வருகை
ADDED :4913 days ago
சென்னை: சிருங்கேரி சங்கராச்சாரியார், நாளை சென்னை வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த சுவாமிகள், கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக, 14 ம் தேதி சென்னை நகருக்கு வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு தி.நகர் வெங்கட்நாராயணாசாலையில் உள்ள சிருங்கேரி பாரதி வித்யாலயத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 22 ம் தேதி சரதா கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் பங்கேற்கிறார்.
சென்னையில், ஜூலை 1ம் தேதி வரை தங்கும் அவர், மீனாட்சி கல்லூரி, மேற்கு மாம்பலம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் தங்கி பக்தர்களை சந்திக்க உள்ளார்.