ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: நெல் அளவை கண்டருளிய நம்பெருமாள்
ADDED :1951 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவில், நம்பெருமாள் நெல் அளவை கண்டருளல் நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் வரும், 11 வரை கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவில் இன்று (மே.,7) மாலை நம்பெருமாள் நெல் அளவை கண்டருளல் மற்றும் தாயார் சன்னதி சென்றடைதல் நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும், 9ல்நடக்கிறது. பக்தர்கள் தேர் திருவிழாவை, srirangam temple (srirangam live)என்ற, யு-டியூப் சேனல் மூலம் காண வசதி செய்யப் பட்டுள்ளது.