ரமணரின் 71வது ஆராதனை விழா: பக்தர்களின்றி நடந்தது
ADDED :1969 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரமணரின், 71வது ஆராதனை விழா, கொரோனாவால் பக்தர்களின்றி நடந்தது. திருவண்ணாமலை, செங்கம் சாலையில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில், ரமணரின், 71வது ஆராதனை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு ரமணரின் லிங்கத்திற்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. பின்னர் கொரோனா ஊரடங்கால், பக்தர்களின்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.