காளஹஸ்தி கோவில் பணம் ரூ.6 கோடி வங்கியில் டெபாசிட்!
ADDED :4863 days ago
நகரி : சிவ ஸ்தலமான காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், வருமானமாக கிடைத்த, ஆறு கோடி ரூபாயை, கோவில் நிர்வாக அதிகாரி விஜயகுமார், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கியில், டெபாசிட் செய்தார். கோவிலில் இதற்கு முன் கிடைத்து வந்த வருமானத்தில், ராகு கேது நாக தோஷ நிவாரண பூஜைக்கு உபயோகப்படுத்தப்படும், வெள்ளிப் பொருட்களை வாங்க, அதிக தொகை செலுத்தி வந்தனர். தற்போது நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வரும் விஜயகுமார், கோவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு, வருமானத்தை வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்து, ஆறு கோடி ரூபாய் பணத்தை, முதல் முறையாக வங்கியில் டெபாசிட் செய்தார்.