அட்சய திரிதியை: காலடி கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1609 days ago
காலடி: கேரளா எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்கு திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடைபெற்றது. இங்கு தான் இந்து மதத்தின் குல குருவான ஆதி சங்கரர் அவதரித்தார். ஆண்டுதோறும் அட்சய திரிதியை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் இன்றி இக்கோயிலின் உள்ளேயே அட்சய திரிதியை தினமான இன்று (14ம் தேதி) மகாலட்சுமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்புக்கு: 093888 62321