வெற்றி நிச்சயம்
ADDED :1606 days ago
ஒருநாள் இயேசு கடற்கரையில் நடந்து சென்றார். சோர்வுடன் நின்றிருந்த பேதுரு என்பவரைக் கண்டார். இரவு முழுவதும் கடலில் வலை வீசியும் மீன் ஏதும் கிடைக்காதைச் சொல்லி பேதுருவிடம், ‘‘இன்னும் சற்று ஆழத்திற்கு போய் வலை வீசினால் பலன் கிடைக்கும்’’ என்று வழிகாட்டினார்.
‘‘உம் வார்த்தைகளை நம்புகிறேன்’’ என்றார் பேதுரு. நடுக்கடலுக்குச் சென்ற போது வலையே கிழியும் அளவுக்கு மிகுதியான மீன்கள் கிடைத்தன. அதே நேரத்தில் முயற்சியில் ஈடுபடாத ஒருவருக்கு ஆண்டவர் உதவ முன்வர மாட்டார். ஆண்டவரின் ஆசியும், மனிதனின் முயற்சியும் இணையும் போது தான் செயல்கள் வெற்றி பெறுகின்றன.