உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா துவக்கம்

வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கலை முன்னிட்டு அம்மனின் வாகனமான சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.வீட்டிலிருந்த படியே விரதமிருக்க துவங்கி உள்ளனர்.இதையடுத்து பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் மே 25ல் பொங்கல், 26ல் கயிறுகுத்து, அக்னி சட்டி எடுத்தல் நடக்கிறது.ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !