ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்
ADDED :1968 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் பக்தர்களின்றி துவங்கியது. ஆண்டு தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் வசந்த உற்ஸவம் ஊரடங்கால் ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது.வெண்பட்டு சாற்றபட்டு, மலர்சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர். பத்து நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26ல் நிறைவடைகிறது.