தர்ம ரக்ஷண ஸமிதியின் நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் கலந்துரையாடல்
திருப்புல்லாணி: தர்ம ரக்ஷன சமிதியின் சார்பில் ஆன்லைன் மூலம் நிர்வாகிகள் கலந்துரையாடல் நடந்தது. ராமேஸ்வரம் மண்டல அமைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாகிகள் வசவலிங்கம், கோபி, பரமக்குடி ஜெகதீசன், அழகன்குளம் பிரேமா ரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல அமைப்பாளர் சண்முகம் நன்றி கூறினார். தர்ம ரக்ஷண ஸமிதியின் சார்பில் புதிதாக மொபைல் ஆஃப் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஹிந்து தர்மத்தின் பழமையான வேதங்கள், உபநிடதங்கள் குறித்த விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் புராண இதிகாச விஷயங்களில் சந்தேகங்களை எளிதில் கேட்டு தெரிந்துகொள்ளும் வகையிலும் ஆன்மீக விஷயங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.