கஜபூஜை சுந்தர சுவாமிகளுக்கு 27வது நினைவு குருபூஜை விழா
ADDED :1601 days ago
கோவை: சிரவையாதீனம் கஜபூஜை சுந்தரசுவாமிகளுக்கு, நேற்று 27வது ஆண்டாக நினைவு குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.சிரவையாதீனம் கவுமார மடாலயத்தின் மூன்றாவது குரு மகா சன்னிதானமாக விளங்கியவர் கஜபூஜை சுந்தரசுவாமிகள். அவர் கோவையில், 108 யானைகளை கொண்டு உலக நன்மைக்காக யாகவேள்வி நடத்தினார்.அவரது நினைவாக சுந்தரசுவாமிகளுக்கு, 27வது ஆண்டு நினைவு குருபூஜை விழா நேற்று நடந்தது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். காலை இன்னிசை நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு கஜபூஜை சுந்தரசுவாமிகளின் திருவுருவத்திற்கு சிறப்பு திருமஞ்சனமும், 11:30 மணிக்கு நலம் நல்கும் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. 12:30 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது.சிரவையாதீனத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும், கவுமார மடாலயம் என்ற முகநுால் பக்கத்தில் இணையம் வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.