கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா
ADDED :1659 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், வாசவி கன்னியா பரமேஸ்வரி ஜெயந்தி முன்னிட்டு இன்று காலை, கலச ஸ்தாபனம், ஹோமம், அம்மனுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாரதனை நடந்தது. நோய்பினியில் இருந்து உலகம் நன்மைபெற, அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் யாரும் இன்றி, ஆரிய வைசிய சமூகத்தினரின் ஏற்பாட்டில், கோவில் குருக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்று நடத்தினார்.