உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலவநத்தம் ஒற்றை சனீஸ்வரர்: தோஷம் நீக்கும் அற்புதம்

பாலவநத்தம் ஒற்றை சனீஸ்வரர்: தோஷம் நீக்கும் அற்புதம்

 அருப்புக்கோட்ட: நவகிரக்கத்தில் ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான். கடுமையான துன்பம், அளவற்ற நன்மை தருபவரும் சனீஸ்வரர். கிரகங்களில் மெதுவாக நகர கூடியவர். மனிதர்களின் அனைத்து கர்ம வினைகளும் சனி கிரகத்தில் தான் பதிவாகி இருக்கும் என்பது ஐதீகம்.சனி பகவானுக்கு பல சிறப்பு கோயில்கள் உண்டு. எனினும் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கைலாசநாதர் கோயிலில் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையான ஒற்றை சனீஸ்வரர் சன்னதி வேறெங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷம்.


சனி பகவானின் வாகனமான காகம் காலின் அருகில் அமர்ந்து இருக்கும். இங்கு கையில் காகம் அமர்ந்திருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம்.இச்சிலை பிற்கால பாண்டியர் கால கலை பாணி என்றும் கூறுகின்றனர். ஒற்றை கல்லால் ஆனது. தனியாக இருப்பது சிறப்பு. சனி தோறும் சனீஸ்வர பகவானுக்கு அலங்காரம், பூஜைகள் நடக்கும். ஏழரை சனியின் தாக்கம் குறைய இங்குள்ள சனி பகவான் சன்னதிக்கு வந்துசிறப்பு பூஜைகள் செய்வர். வாழ்வில் வளம் பெற பாலவநத்தம் ஒற்றை சனீஸ்வரர் பகவானை வேண்டுவோம். வாழ்வில் ஒளி பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !