கொரோனா குறைய வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :1602 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கொரோனா தாக்கம் குறைய சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா நடந்தது.மன்ற செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார்.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன்,ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி முன்னிலை வகித்தனர். சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் சிவஞான அடிகள், சுப்ரமணி முன்னிலையில் அகவல் படித்து கொரோனா தாக்கம் குறையவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய சிறப்பு பிரார்த்தனை நடந்தது.