உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் வசந்த உற்ஸவம்: 5ம் நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் வசந்த உற்ஸவம்: 5ம் நாள் விழா

 ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் பக்தர்களின்றி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் வசந்த உற்ஸவம் ஊரடங்கால் ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. விழாவின் 5ம் நாளில், பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் அருள்பாலித்தனர். பத்து நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26ல் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !