உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சொத்து வெளிப்படை தன்மை

கோவில் சொத்து வெளிப்படை தன்மை

 கோவை:தமிழக அறநிலையத்துறையின் கீழ், உள்ள கோவில்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற முடிவுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிர்வாகம், அலுவலர்கள் பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களையும், கோவில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களையும், அசையும் மற்றும்அசையா சொத்துகளில் உரிமை ஆவணங்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின், இந்த முடிவிற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.சத்குரு தனது, டுவிட்டர் பக்கத்தில், அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள். சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுக்கள். வெளிப்படைத்தன்மை தான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துக்கள் என, தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தின் மூலம், அறநிலையத்துறையின் வரவு - செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும்; ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.கோவில்களுக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து அதை வசூலிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !