ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
ADDED :1603 days ago
குமாரபாளையம்: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் குமாரபாளையம் ஜி.?ஹச்.,ல் நாள் ஒன்றுக்கு, 60 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. உள் நோயாளிகளுக்கு நாங்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் உணவினை மருத்துவ பரிசோதனை செய்து, ரிசல்ட்க்காக காத்திருக்கும் நபர்களுக்கு வழங்கி வருகிறோம். கொரோனா தடுப்பூசி பல நாட்களாக வரவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மருந்து வந்ததும் சீனியாரிட்டி அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.