வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1604 days ago
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா பிரமோற்சவத்தில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா பிரமோற்சவ விழா பக்தர்களின்றி கடந்த 16ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 9ம் நாள் விழாவில் காலை பஞ்சமூர்த்தி சிறப்பு அபிஷேகம், கோகிலாம்பிகை சமே த திருக்காமீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (24ம் தேதி) தேர் திருவிழாவிற்கு அரசு அனுமதி இல்லாததால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.