கொரோனா நீங்க வேண்டி தன்வந்திரி ஹோமம்
ADDED :1604 days ago
புதுச்சேரி: காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகா ஹோமம் நேற்று நடந்தது. உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலமாக வாழவும், முதல்வர் ரங்கசாமியின் பெயரில் மருத்துவ கடவுளான தன்வந்திரி ஹோமத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த ஹோமத்தில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன் மற்றும் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.