விழுப்புரம் சங்கரமடத்தில் தடுப்பூசி முகாம்
ADDED :1656 days ago
விழுப்புரம் : விழுப்புரம் சங்கரமடத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் சங்கரமடம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமிற்கு, மேலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகிகள் திலீப்சந்த், செந்தில்குமார், சூர்யநாராயணன், தியாகராஜன், மடம் ஆசிரியர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, டாக்டர் ஜோதி தலைமையில் செவிலியர் கிருத்திகா மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை நடந்த முகாமில், 150 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.