கொரோனா நீங்க லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :1710 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் தொற்று பரவலை தடுக்க, சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது.
நாடு முழுவதும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை தடுக்கவும், தொற்றிலிருந்து, நாட்டு மக்களின் உயிர்களை காக்கவும் வேண்டி, பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் கடந்த, 10 நாட்களாக சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது. பூஜைகள் பக்தர்கள் இன்றி நடந்தன. விழாவையொட்டி, பெருமாள், தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.