கள்ளக்குறிச்சி அம்மன் கோவிலில் அக்னி திருவிழா!
ADDED :4859 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா நடந்தது.இக்கோவிலில் அக்னி சட்டி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு கோமுகி நதிக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சக்தி அழைத் தல் நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் தீ சட்டி ஏந்தியபடி கோவிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.