தேனி முருகன் கோயில்களில் வைகாசி விசாகம்
ADDED :1594 days ago
தேனி, : தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று சுவாமி அவதரித்த திருநாளான வைகாசி விழா சிறப்பு பூஜை நடந்தது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. தேனி -பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியருக்கும், முத்து குமாரசுவாமிக்கும் பாலாபிேஷகம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில்,போடி சுப்பிரமணியர் கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ராஜஅலங்காரத்தில் காட்சிளித்தார்.