உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கொரோனா நீங்க சிறப்பு யாகம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கொரோனா நீங்க சிறப்பு யாகம்

திருவெற்றியூர் : திருவெற்றியூர் கோயிலில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க யாகம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானம் திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார் மணிகண்டன் தலைமையில் வேத மந்திரங்கள் ஓதி தீபாராதனை நடந்தது. பாகம்பிரியாள், வல்மீகநாதர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !