பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் விழா நடைபெறவில்லை
ADDED :1707 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா நடைபெறவில்லை.
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைப்படி கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா நடைபெறவில்லை. ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பழநி முருக பக்தர்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலையில் வீட்டிலேயே சுவாமியை வழிபட்டனர்.அடிவாரம் மற்றும் திரு ஆவினங்குடி பகுதிகளில் வசிப்பவர்கள் சிலர் கோயில் வாயிலின் நின்று தரிசனம் செய்தனர். பழநி அருகே பாப்பன்பட்டி ஐவர்மலை குழந்தை வேலப்பர் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.