கோவில் மண்டபத்தை அபகரிக்க முயற்சி
ADDED :1628 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோவில் அருகே , ஹிந்து ச மய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தை மறைத்து, கான்கிரீட் துாண்கள் அமைத்து கட்டடம் கட்ட, அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார். தகவலறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள், அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் கோவிலுக்கு வந்து, நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி, கட்டடம் கட்டுவது தெரியவந்தது. தொடர்ந்து, பணாமுடீஸ்வரர் கோவில் மண்டபம் வெளியே கட்டப்பட்ட சுவர்களை, ஜே .சி.பி., இயந்திரத்தால் இடித்து, கோயில் மண்டபத்தை மீட்டனர்.