உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலையத்துறை சார்பில் இலவச உணவு

அறநிலையத்துறை சார்பில் இலவச உணவு

அன்னூர்: அறநிலையத்துறை சார்பில், 15வது நாளாக, இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில்களில், நித்திய அன்னதான திட்டம் செயல்பட்டு வந்தது. கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால், கோவில்களில் வழங்கப்பட்ட அன்னதானம், வெளியே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இடுகம்பாளையம், ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோவில் சார்பில், 200 உணவு பொட்டலங்களும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் சார்பில், 75 உணவு பொட்டலங்களும், கடந்த 16ம் தேதி முதல், அன்னூர் அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில், உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள், நோயாளிகளுடன் இருப்போர் மற்றும் அரசு மருத்துவமனை முன், ஏழை, எளிய மக்களுக்கு, 15வது நாளாக, நேற்றும் 275 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !